Monday, 26 December 2011

பெருமகிழ் செய்தலால்...



உன்னைத் தேடிவருகிற
எல்லோரையும் மகிழ்விக்கிறாய்.
நீ வெட்கப்படுவதில்லை.
உனக்குக் கூச்சம் இல்லை.
மெல்லிய மேகம் போன்ற
உடலை வல்லிய உணர்சிகளால்
மூடி வைத்திருக்கிறாய்.
உணர்சிகளைக்
கிழித்து உன் உடலை
நுகரும் சக்தி
கொண்டவர்கள் குறைவு.

அது சரி...
நீ உள்வாங்கிய
உயிரணுக்களை
என்ன செய்கிறாய்?
அதை வைத்து
ஒரு கொள்ளிக்கட்டையாவது
தயார் செய்திருக்கலாம்.

No comments:

Post a Comment